உண்டியலில் சேர்த்த ரூ 4 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கிய 5ஆம் வகுப்பு மாணவி....
✍ | ராஜாமதிராஜ்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளராக பணியாற்றும் பால்ராஜ் என்பவரின் மகள் மினர்வாலக்னோ. 5ஆம் வகுப்பு படித்துவரும் இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
பிறந்த நாளை முன்னிட்டு அவர் கடந்த ஒரு வருடமாக உண்டியலில் சேர்த்த ரூ 4000 பணம் மற்றும் தன் தந்தை உதவியால் ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி் மளிகை பொருட்களை மயிலாடுதுறையில் உள்ள கலைத்தாய் அறக்கட்டளையின் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கினார்.
சிறுமியின் இந்த செயலை பாராட்டி அந்த குழந்தைக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாடக கலைஞர்களுக்கு தனது உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
No comments