Header Ads

புதியதாக 650சிசி பைக்கை உருவாக்கும் பணியில் ராயல் என்பீல்டு... கிளாசிக் 350-க்கு அப்டேட் வெர்சன்...


✍️ | மகிழ்மதி.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான புதிய தலைமுறை கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் ஷெர்பா/ஹண்டர் பைக்குகள் ஒன்றாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டதுபோது கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பழமையான தோற்றத்திலேயே இன்றும் தயாரிப்புகளை வெளியிட்டு அதன் மூலம் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக ராயல் என்பீல்டு உள்ளது. ஏனெனில் ரெட்ரோ டிசைனில் பைக்குகளை தயாரிப்பதில் ராயல் என்பீல்டு நிறுவனம் பிரபலமானது.



இந்த வகையில் வரும் மாதங்களில் புதியதாக இரு பைக் மாடல்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளில் ராயல் என்பீல்டு பல மாதங்களாக ஈடுப்பட்டு வருவதால், அந்த புதிய பைக்குகளின் மாதிரிகள் அவ்வப்போது சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றன.


இந்த வகையில் தற்போது மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளுடன் இரு புது எண்ட்ரீ-லெவல் எடை குறைவான தயாரிப்புகளும் சோதனையின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய தயாரிப்புகளில் ஒன்று ஷெர்பா/ஹண்டராக இருக்க வாய்ப்புள்ளது.

புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் தற்போது முதன்முறையாக சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. 

பிரபலமான ரெட்ரோ டிசைனிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த 2021 பைக் மாடல் புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை தவிர்த்து வேறெந்த விபரமும் கிடைக்கவில்லை. 

மீட்டியோர் 350 பக்கம் வந்தால், இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அடுத்த அறிமுகமாகும். இதனால் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுவரும் புதிய மீட்டியோர் தான் புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட முதல் பைக் ஆகும்.

விற்பனை நிறுத்தப்பட்ட தண்டர்பேர்டு 350-க்கு மாற்றாக வெளிவந்தாலும் மீட்டியோர் 350-யும் தனக்கு அடையாளமாக சில டிசைன் பாகங்களை ஏற்றுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள புதிய சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தண்டர்பேர்டில் வெளிப்படுத்திய ஆற்றலை தான் வெளிப்படுத்துமா அல்லது வேறுப்பாட்டை கொண்டிருக்குமா என்பது கேள்வியாக உள்ளது.



No comments

Powered by Blogger.