Header Ads

எச்.வசந்தகுமார் உடலுக்கு தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி - இன்று சொந்த ஊரில் இறுதிச்சடங்கு.....

 


✍️ | மகிழ்மதி.

மறைந்த காங்கிரஸ் எம்.பி எச். வசந்தகுமாரின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தி. நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

உறவினர்கள், வசந்த் அன் கோ ஊழியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். சில மணி நேர அஞ்சலிக்குப் பின்னர் சென்னை காமராஜர் அரங்கில் தலைவர், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சில மணிநேரங்கள் வைக்கப்பட்டது. இன்று அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.வசந்தகுமார் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி 

பொதுமக்களின் பார்வைக்காக சனிக்கிழமை காலை காமராஜர் அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. வசந்த குமார் உடலுக்கு தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவரது சொந்த ஊரில் இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி எச். வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக நேற்று காலையில் பொதுமக்கள் பார்வைக்காக வசந்தகுமார் உடல் வைக்கப்பட்டது. கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

சொந்த ஊரில் தொகுதி மக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.




No comments

Powered by Blogger.