Header Ads

விநாயகர் ஊர்வலம் இல்லை அரசு அறிவிப்பு - மண்பாண்ட தொழிலாளர்கள் கண்ணீர்....

 


 ✍  |   ராஜாமதிராஜ் .

அரசு சுலபமா சொல்லீருச்சு விநாயகர் ஊர்வலம் இல்லனு...
கஷ்டப்பட்டு செஞ்ச சிலையெல்லாம் என்ன பன்றது? சோத்துக்கு வழியில்லாத நேரத்தில இந்த அறிவிப்பு நெஞ்சுல  இடி விழுந்த மாதிரி இருக்கு..... மண்பாண்ட தொழிலாளர்கள் கண்ணீர்.....

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகின்ற 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆறு மாதமாக கரோனா வைரஸ் தாக்கத்தினால் அச்சத்தில் இருந்த மக்கள் இந்த விழாவையாவது கொண்டாடலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில் அரசு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாது எனவும், கடற்கரையில் கரைக்கக் கூடாது எனவும் அறிவித்துள்ளது. கூட்டம் சேர்ந்தால் வைரஸ் தொற்று இன்னும் அதிகமாகும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அனைத்து ஊர்களிலும்  விநாயகர் சிலைகள் செய்யும் பணி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும். அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துவரடிமனை எனும் கிராமத்தில் வருடம் தோறும் அதிக அளவிலான விநாயகர் சிலைகள் வித விதமாக செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையிலும் இந்த கிராமத்தில் தான் அதிக அளவிலான விநாயகர் சிலைகள்  செய்யப்படுகிறது.   மேலும் இங்கு செய்யப்படும்  சிலைகள் களிமண்ணால் ஆன சிலைகள் இருந்தாலும் கூட மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பானதாகவும், கலை நயம் மிக்கதாகவும் இருப்பதால் மற்ற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து சிலைகள் விற்பனைக்கு பலரும் வாங்கிச் செல்வது ஒரு சிறப்பு. இந்த ஆண்டு கரோனா வைரஸ் தாக்கத்தினால் சிலைகள் விற்பனை குறைந்த நிலையில் தற்போது அரசு அறிவித்த அறிக்கையினால் ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களும் கேன்சல் ஆகிவிட்டது, தற்போது செய்த சிலைகள் அனைத்தும் வீணாகி விட்டதே என அப்பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.