திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்; பயிர் காப்பீட்டு தொகை வேண்டி
மன்னார்குடி அருகே கோட்டூர் பயிர் காப்பீட்டு தொகை வேண்டி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னர்குடி அருகே கோட்டூரில் உள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலக முன்பு திமுக சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் A.K.S.விஜயன் பங்கேற்று கண்டன உரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2018-19 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்கள் 360 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பிட்டு தொகை வழங்கபப்ட்டுள்ளதாகவும் அதிலும் பல கிராமங்களுக்கு வழங்கப்பட்ட காப்பிட்டு தொகையில் சரியான தகவல்களை அரசு அதிகாரிகள் தெரிவிக்க வில்லை என குற்றம் சாட்டினார்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கோரி தி.மு.க. வினர் ஏராளமானர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
No comments