"18 வயது தாலி"
அன்று.....!
கன்னத்தில் அழகிய குழியுடனும், கார்மேகம் போல் அழகிய கருமை நிறத்துடனும், குயிலே பொறாமை படும் அளவிற்கு இனிமையான குரல் வளத்துடனும் வகுப்பிற்குள் ஓர் அழகிய பெண் நுழைந்தால். அன்று அவளுக்கு தெரியாது அவளது படிப்புக்கோட்டை சிறிது நாளில் தகர்க்க படும் என்று. அவள் இருக்கும் இடத்தில் சிரிப்பு மட்டுமே நிறைந்திருக்கும் ஆனால் அவள் மனதிலோ கவலையும், பயம் மட்டுமே இருக்கும்.
ஒரு நாள்! சிறு குழந்தை போல் எப்போதும் சிரிப்பு தவழும் அவள் முகத்தில் காரிருள் போன்று பயம் அவள் முகத்தில் சூழ்ந்திருந்தது. அவளது தோழிகள் அனைவரும் அவளிடம் என்னடி? என்னாச்சு? ஏன் சோகமா இருக்க? என்று பல கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அவள் கண்களில் இருந்து வழிந்த நீர்களே பதில் கூறின. ஆம்! அவளுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவளது பெற்றோர்களோ படிப்பறிவு இல்லாதவர்கள் அதுமட்டுமின்றி சாதி என்னும் மிருக இனத்தை சேர்ந்தவர்கள். அந்த சாதி முன்பு அவளின் படிப்புக்கோட்டை சிறிய குடிசைப் போன்றே தென் பட்டது அந்த பெற்றோருக்கு.
அவளோ பெற்றோர் மீது கண்மூடித் தனமான அன்பை வைத்திருப்பவள். அதனால், அவளால் மறுக்க முடியவில்லை. இறுதியில் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டாள். அவளுக்கு பார்த்த மாப்பிளையோ படிப்பறிவு இல்லாதவர் (வயது 34). அவள் படிப்பிலோ மிகுந்த புத்திசாலி. அவளின் வயதோ வெறும் 19 நெருங்கியது,
அவன் அந்த தாலியை கையில் எடுத்தான், அவள் முகத்தில் சிரிப்பற்று பயமும் பதட்டமுமே அதிகம் இருந்தது (அந்த ஒரு நொடி திக்கற்று நின்றாள்). பிறகு, அவள் பெற்றோர் முகத்தில் இருக்கும் சிரிப்பைக் கண்டு மனதை தேற்றிக்கொண்டாள்.
வருடம் பல கடந்தன....
அவள் கையிலோ ஒரு பெண் குழந்தை இருந்தது. அவளது கணவனோ தினமும் குடித்து தன் உடலை கெடுத்துக் கொண்டு ஒரு நாள் இறந்து போனார்.. அவளின் பெற்றோரும் இவளின் திருமணம் முடிந்ததும் சில மாதங்களிலேயே உடல் நலம் குன்றி இறந்தனர்.
இப்போது, அவளின் நிலைமையோ வீட்டூ வேலை செய்து குழந்தைக்கு பசியாற்றினாள். இப்போதோ அவளுக்கு உதவ யாரும் இல்லை. உறவினர்களும் கைவிட்டனர். இந்நேரம் அவள் படித்திருந்தாள் நல்ல வேளையில் அமர்ந்திருப்பாள். ஆனால் பெற்றோரின் மூடத் தனத்தால் இன்று அவள் வாழ்விழந்து நின்றாள்.
இன்று இதுப்போன்று ஆயிரம் இளமை பெண்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். அதற்கு காரணம் போதிய கல்வியறிவின்மை, சமூகத்தில் பரவி கிடக்கும் சாதி, பெண்களை பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாமை.
கருத்து:
பெற்றோர்களை கைவிடாமல் பார்த்துக் கொள்வதே பிள்ளைகளின் கடமையே தவிர, பெற்றோர்கள் கூறும் அனைத்தையும் கண்மூடி தனமாக கேட்பது அல்ல!ஏனென்றால், சில சூழ்நிலைகளில் அவர்களும் நம் வாழ்வில் பயணிப்பது சில காலமே! நம் வழக்கை நம் கையில்.
No comments