ஆவடி பகுதிகளில் ரூ 2 கோடி மதிப்பிலான குட்கா பொருளை பதுக்கி விற்பனை செய்த 9 பேர் கைது.
✍️ | ராஜாமதிராஜ்.
சென்னை ஆவடி அருகே குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை ஆவடி அடுத்த காட்டூர் என்ற இடத்தில் குடோனில் பதுக்கி வைத்த 2 கோடி மதிப்புள்ள 25 டன் குட்கா போதைப்பொருட்களை நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புடைய பாலாஜி ,பாபுலால், ரத்தினகுமார், ஆகிய மூன்று பேரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் குட்க்கா பொருட்களை கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்து சென்னை சுற்றியுள்ள ஆவடி அம்பத்தூர் கொரட்டூர் பட்டரவாக்கம் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் மொத்தமாக விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதேபோல திருமுல்லைவாயில் அயப்பாக்கம் போன்ற பகுதிகளில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்து தேன் ராஜ் ,மாரியப்பன், கணேசன், மணிவண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பகுதிகளில் திருநின்றவூர் கொசவம்பாளையம் சோதனைச் சாவடி மற்றும் திருநின்றவூர் பாக்கம் சோதனைச் சாவடி போன்ற இடங்களில் வாகன சோதனை ஈடுபட்ட திருநின்றவூர் காவல் துறையினர் பகுதியில் குட்கா கடத்தி வந்த முருகதாஸ் கோதண்டபாணி ஆகிய இருவரையும் கைது செய்து இவர்களிடமிருந்து மொத்தம் 450 கிலோ குட்கா வைப் போதைப்பொருட்களை செய்து கைது செய்தனர்.
அதேபோன்று இந்த வழக்கில் பயன்படுத்தி வந்த இரண்டு லாரி உட்பட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாகியுள்ள முருகன் முருகேசன் உப்பட 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments