3 நாள் கூட்டத்திற்கு 3 1/2 கோடி செலவு அப்பாடியே!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
கொரோனா தொற்றின் காரணமாக தமிழக சட்டபேரவை கூட்டம். 10 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை செயலகத்திற்கு வெளியே கலைவாணர் அரங்கில் கடந்த 14ம் தேதி முதல் இன்று வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த 3 நாட்கள் சட்ட பேரவை கூட்டத்திற்காக தற்காலிக சட்டபேரவை அரங்கை பொதுப்பணி துறை ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக அமைத்து கொடுத்து அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்திருந்தாலும், இந்த தற்காலிக சட்டபேரவை அரங்கை அமைக்க செய்யப்பட்ட தொகை தான் வெகுஜன மக்களிடையே அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக சட்டபேரவை அரங்கினுள் புதிய மேசை, நாற்காலி என பல வகையான பொருட்களுக்கு ரூபாய் 31/2 கோடி செலவு செய்திருப்பது தான் கொரோனா கால ஊரடங்கில் வாழ்வதாரமின்றி தவிக்கும் வெகுஜன மக்களின் ஏக்கமாக உள்ளது.
No comments