கரூர் அருகே ஆற்றில் நண்பர்களுடம் குளிக்கும் போது கட்டிட தொழிலாளி மாயம்.
✍️ | ராஜாமதிராஜ்.
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை அடுத்த மணவாடியை சார்ந்தவர் தினேஷ்குமார். வயது 26.
டைல்ஸ் ஒட்டும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் திருமணத்திற்காக தாந்தோன்றிமலை பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க நண்பர்கள் 8 பேருடன் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது மாயமானார்.
இது தொடர்பாக அவர்களது நண்பர்கள் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மாயமான தினேஷ்குமாரை தேடினர். இரவு ஆகி விட்டதால் தேட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நாளை காலை மீண்டும் தேடும் பணியை தொடர்வதாக கூறி விட்டு தீயணைப்புத் துறையினர் சென்று விட்டனர். தகவலறிந்து அங்கு திரண்ட தினேஷ்குமார் உறவினர்கள் சோகத்தில் அங்கேயே காத்திருக்கின்றனர்.
No comments