எமனுக்கே டாட்டா காட்டும் இந்த கார்....
புதிய பரிசோதனையின் அடிப்படையில் டொயோட்டா யாரிஸ் கார் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் என்பது தெரியவந்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் யாரிஸ் மாடலும் ஒன்று. இக்காரையே 'ஐரோப்பிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம்' (EURO NCAP) எனும் அமைப்பு மோதல் வினைக்கு உட்படுத்தி அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, டொயோட்டா யாரிஸ் 5 நட்சத்திர பாதுகாப்பு தரம் கொண்ட கார் என்பது தெரிய வந்துள்ளது.
யாரிஸ் ஓர் ஐந்து கதவுகள் அமைப்புடைய ஹேட்ச்பேக் காராகும். இது வெளிநாடுகளில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வெர்ஷன்களில் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே தனது புதிய பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பா என்சிஏபி அமைப்பு மோதல் வினைக்கு உட்படுத்தியது. புதிய விதிகளுடன் ஆய்விற்கு உட்படுத்தப்படும் முதல் கார் இதுவே ஆகும்.
எனவே கடுமையான கெடுபிடிகள் இந்த பரிசோதனையின் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனது பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உறுதியான கட்டுமானங்களினால் யாரிஸ் ஹேட்ச்பேக் 5 நட்சத்திர மதிப்பெண்ணைப் பெற்று பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் வாகன பாதுகாப்பு தரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. எனவேதான், அண்மையில் தனது மோதல் வினைக்கான படிநிலைகளையும் ஐரோப்பா என்சிஏபி அமைப்பு அப்கிரேட் செய்தது. இதன்படி, புதிய 2020 யூரோ என்சிஏபி சோதனையில் அனைத்து ஃப்ரண்டல் ஆஃப்செட் சோதனைகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
அதாவது, பெரியவர்களின் பாதுகாப்பை 86 சதவீதமும், சிறியவர்களின் பாதுகாப்பை 81 சதவீதமும், பாதசாரிகள் மற்றும் பிறரின் பாதுகாப்பை 78 சதவீதமும் இக்கார் உறுதிப்படுத்துகின்றது. இதேபோன்று, அவசர காலங்களில் உதவி செய்வதிலும் இக்கார் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றது. இதில் 85 சதவீதம் சிறந்த கார் என்ற சான்றை யாரிஸ் ஹேட்ச்பேக் பெற்றிருக்கிறது. இவையே அனைவருக்கும் யாரிஸ் ஹேட்ச்பேக் கார் உகந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
No comments