Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

  • 13வது ஐ.பி.எல் போட்டியின் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அபார வெற்றி.

  • சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.21 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.99-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

  • துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு வீடு திரும்பினார்.

  • மஹாளய அமாவாசை தினத்தில் சதுரகிரி மலைக்கோயிலில் தரிசனம் செய்த 4 பேருக்கு கொரோனா. மஹாளய அமாவாசையன்று ஒரே நாளில் 10,800 பேர் தரிசனம் செய்த நிலையில், பக்தர்கள் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

  • கபினி அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

  • மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  • அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு. நாளை முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப் போவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தகவல். பெயர் மாற்றத்தைக் கைவிடா விட்டால், நீதிமன்றத்தை நாட உள்ளதாக AUTA அறிவிப்பு.

No comments

Powered by Blogger.