முக்கிய செய்திகள்
* திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி மற்றும் செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி. இருவரும் அதிமுக-வை சேர்ந்தவர்கள். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ளதால் எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
* மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத இருந்தார், மதுரை காவல் சார்பு ஆய்வாளரின் மகள் ஜோதி துர்கா.
* கொரோனா பரவலால் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம். செப். 17 முதல் அக். 18 வரை புராட்டாசி வழிபாட்டிற்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவிப்பு.
* தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்.
* விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் கிசான் திட்டம் தற்காலிக நிறுத்தம் தமிழக அரசு அறிவிப்பு. கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை. கிசான் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை.
* NEET EXAM -2020... வரும் 13.09.2020 அன்று நடைபெற உள்ள NEET-2020 தேர்வுக்கான தேர்வு மையங்களின் பட்டியல் வெளியீடு.
* நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி. நீட் மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல -திமுக தலைவர் ஸ்டாலின்.
* நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது - டிடிவி தினகரன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ? - டிடிவி தினகரன்.
* மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் விபரீதமுடிவுகள் துயரத்தை தருகிறது. மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல் - துணை முதலவர் ஓபிஎஸ்.
* முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய ரூ.1.62 கோடி மோசடி வழக்கு - சென்னையிலுள்ள MTC எம்.டி கணேசன் வீடு உட்பட வழக்கில் தொடர்புடையவர்களின் மதுரை, கரூர், ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை - விசாரணை.
No comments