Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்

SPB காலமானார் என்ற செய்தி எனை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது - விஜயகாந்த் அறிக்கை!


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் உடனிருந்தனர்.


வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். எங்களை போன்ற விவசாயிகளுக்குதான் விவசாயிகளின் வேதனை தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


சென்னை வடபழனியில் வேலையின்மை காரணமாக ஐயப்பன் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.கொரோனா ஊரடங்கால் வேலை கிடைக்காத விரக்தியில் பிளம்பர் ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அக்டோபர் 28ல் தேர்தல் 
பீகார் சட்ட மன்ற தேர்தல் 3 கட்டமாக நடைபெறும்.
71 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
94 தொகுதிகளுக்கு 2 ம் கட்டமாக
3ம் கட்டமாக 78 தொகுதி களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

No comments

Powered by Blogger.