Header Ads

இரவு முக்கிய செய்திகள்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார் -  சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்.

தமிழக பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க மூத்த பத்திரிகையாளரும் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினருமான திரு.சுதாங்கன்  (வயது 63 ) இன்று (12-09-2020) காலமானார். உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.அன்னார் மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

* கொரோனா காலக்கட்டத்தில்  தன்னுயிரை துச்சம் என நினைத்து களப்பணியாற்றிய ஊடக கேமிராமேன்களை பாராட்டு விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.   தமிழ்நாடு மீடியா கேமிராமேன் அசோசியேஷன்   சார்பில் நடைப்பெற்ற விழாவில் கேமிராமேன்களுக்கு நலத்திட்ட உதவிகளை பெருநகர சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் வழங்கி கௌரவித்தார்.

* விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்!

* ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை.

ஒளிபரப்புக்கு தடை விதிக்க கோரி தீபா தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

* ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதனுக்கு கொரனா உறுதி செய்யபட்டது.

* நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை. உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டுதற்கொலை இன்று ஒரே நாளில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி.

* விபரீத முடிவுகள் வேண்டாம். பொல்லாத நீட் தேர்வு தூக்கி எறியப்படும். மாணவர்கள், பெற்றோர்களுக்கு திருச்சி சிவா உருக்கமான வேண்டுகோள்.

ஒன்றுக்கும் உதவாத,  பொல்லாத நீட் தேர்வு. மாணவர்களை தகுதியற்றதாக்கி, எங்கள் பிள்ளைகளின் உயிரைப் பறிக்கிறது. விரைவில் நீட் தேர்வு  இல்லாமல் போகும். தூக்கி எறியப்படும். தயவு செய்து விபரீத முடிவுகள் வேண்டாம். அதுவரை பொறுத்திருங்கள்.  தோல்வி முடிவல்ல.

* கொரோனா பாதிப்பு பற்றிய இன்றைய நிலவரம் 
 தமிழ்நாடு 
பாதிப்பு : 5,495
மொத்தம் : 4,97,066
குணமடைந்தோர் : 6,227
மொத்தம் : 4,41,649
உயிரிழப்பு :  76
மொத்தம் : 8,307
சிகிச்சை பெறுவோர் : 47,110

No comments

Powered by Blogger.