Header Ads

800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள்.

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இறப்பு விகிதம் குறைவு என்பதால் மக்கள் மெத்தனமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

* மதுரை - பிகானேர், ராமேஸ்வரம் - புவனேஸ்வர், நெல்லை - ஜாம்நகர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம். மதுரை - பிகானேர் இடையே அக்.22, 29 மற்றும் நவ. 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம்.

* விஜய் சேதுபதி எனது வாழ்க்கை வரலாற்று படத்தில்  நடிப்பதில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். முத்தையா முரளிதரன் கோரிக்கை. என்னால் தமிழகத்தின் ஒரு சிறந்த நடிகர் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. -முத்தையா முரளிதரன்.

* பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைப்பு: சில மாணவர்களுக்கு WH1 என தேர்வு முடிவு காண்பிப்பதால் குழப்பம். ஆன்லைன் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு குறித்து அண்ணா பல்கலை விளக்கம். ஆன்லைன் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் என்பதால் முடிவு நிறுத்தம். முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு இல்லை. சில இறுதியாண்டு  மாணவர்கள் வளாகத் நேர்முகங்கள் மூலம் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

* திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலிதா மரணத்தில் உள்ள சதி குறித்து விசாரிக்கப்படும்- திமுக தலைவர் ஸ்டாலின்.

* அண்ணா பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்படப்பட்ட நிலையில், ஆன்லைன் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி  வைப்பு.

* வட கிழக்கு பருவமழை துவங்குவது தாமதமாக வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம். அக்டோபர் இறுதி வரை மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மட்டுமே மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல். * தென் மாவட்டங்களில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும். மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பு.

* மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையடுத்து, அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியும் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்புமுகாம்  தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்து பயன்பெறலாம்.

சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி.

நவம்பர் 21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020  மற்றும் டிசம்பர் மாதம்.

5.12.2020 ,6.12.2020 ,12.12.2020  ,13.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் விண்ணப்பத்தினை கொடுத்து பெயரினை சேர்த்து பயன் பெறலாம்.

No comments

Powered by Blogger.