Header Ads

லீடர் முக்கிய செய்திகள்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார்  தவசாயி அம்மாள் சேலத்தில் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

* சென்னையில் திமுகவின் செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு.  கே.கே நகர் அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.

* முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்: 

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுள்ளோம்- வி.பி.துரைசாமி. முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவிக்காத நிலையில் வி.பி.துரைசாமி கருத்து. தமிழகத்தில் கூட்டணிகள் மாற வாய்ப்புகள் குறைவு- வி.பி.துரைசாமி.

* தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு நாப்கின் வழங்க நடவடிக்கை.! சட்டதிருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது, தமிழ்நாடு அரசு.

* டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், பாஜகவில் குஷ்பு இணைகிறார். 

* ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்தின் மருமகன் சாலை விபத்தில் மரணம். செல்வத்தின் மூத்த மகளின் கணவர் துளசி ராமன் , பூவிருந்தவல்லி சவீதா கல்லூரியில் இருந்து சென்னை திரும்பும் வழியில் சாலை விபத்தில் மரணம்.

* மக்களிடம்  ஆபாசத்தை பரப்பும் "இரண்டாம் குத்து" திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (12.10.2020) திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க உள்ளது.எனவே சமூக ஆர்வலர்கள் நேரில் வந்து ஆதரவு தருமாறு வேண்டுகிறோம். 

 நன்றி 

லயோலா மணி

ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு

* நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். இதற்கான விடைக்குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா.

*  பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட். அண்ணா பல்கலை. அதிரடி அறிவிப்பு. இந்த வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல். ஆன்லைன் தேர்வை சிலர் படுத்து கொண்டும், டீக்கடையில் உட்கார்ந்தும் எழுதிய நிலையில் நடவடிக்கை.

* முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோன தொற்று உறுதி. கிண்டி கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* கற்பனைக் கருத்துகளால் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள், கலகலத்துப் போவார்கள் - ஸ்டாலின். திமுக கூட்டணியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை - ஸ்டாலின்.

* சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக வரும் 14-ம் தேதி ஆலோசனை.: டி.ஆர்.பாலு: சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் திமுக குழு கூட்டம் வரும் 14-ம் தேதி நடக்கிறது என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் 14- தேதி காலை 9 மணிக்கு ஆலோசனை என்று குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

* மாண்புமிகு தமிழக முதல்வரின் அருமை தாயார் தவுசாயம்மாள்(93) காலமானதையறிந்து வேதனைப் படுகிறேன்.

மறைந்த அன்னைக்கு  அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்து துயருரும் முதல்வர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் -தொல்  திருமாவளவன்.

* வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. முதல்வரின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சேலம் சென்றபோது, வழியிலேயே திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

* சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. இடைக்கால தடையை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு தொடர்ந்த வழக்கு. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்தது.

* மதுரையில் இரட்டைக் கொலை. மதுரை கருப்பாயூரணி அருகில் குன்னத்தூர் (அதிமுக)  ஊராட்சிதலைவர் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்  ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகியோர்  மர்ம கும்பலால் வெட்டி படுகொலை. போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

* வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழல் - துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

No comments

Powered by Blogger.