Header Ads

சென்னையில் வீட்டு வாடகை உயர்வு : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

கொரோனா காலம் முடியாத நிலையில் சென்னையில் பல இடங்களில் வீட்டு  வாடகை உயர்த்தி உள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் பலர் மனசாட்சி இல்லாமல் ரூ.1500 முதல் ரூ.2500 வரை வாடகை உயர்த்து இருப்பது நியாயமா?

வருமானம் இல்லாமல் தவிக்கும் வீட்டு வாடகை யாளர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை ஏற்றுவது நியாயம்தானா? வீட்டு உரிமையாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? கொரோனா  காலக் கட்டத்தில்  கடந்த ஏழு மாதங்களாக வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  இருப்பினும் கடன், நகை அடமானம் வைத்து வாடகை செலுத்தி வருகின்றனர்.

தற்போது வீட்டு உரிமையாளர்கள் கொரோனா வைரஸ்  காரணத்தைக் காட்டி வாடகைதாரர்களிடம் *வீட்டு வாடகை,  தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு வாடகை உயர்த்துவது மன வேதனை அடைந்துள்ளனர்.

வருமானம் இல்லாமல் பல குடும்பங்கள் தவித்து வருகின்றனர். வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் சில பேர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். பலபேர் வறுமையில் இருக்கும்போது இது போன்று வாடகையை உயர்த்துவது நியாயமாகுமா?

தமிழக அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பாவி பொது மக்களின் கோரிக்கை?


No comments

Powered by Blogger.