Header Ads

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி...

 


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - கோவை, மதுரை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது


சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-மதுரை (வண்டி எண்: 06019) இடையே திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் ஏ.சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 19-ந்தேதி முதல், இரவு 10.30 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும்.


மறுமார்க்கமாக மதுரை-சென்னை சென்டிரல் (06020) இடையே செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ஏ.சி. அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள காலை 7.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.


சென்னை சென்டிரல்-கோவை (06027) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரவு 7.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக கோவை-சென்னை சென்டிரல்(06028) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்படும்.


 கன்னியாகுமரி-ஹவுரா (02666) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 24-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஹவுரா-கன்னியாகுமரி (02665) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை தோறும் மாலை 4.10 மணிக்கு ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.


சந்திரகாச்சி-சென்னை சென்டிரல் (02807) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.05 மணிக்கு சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்- சந்திரகாச்சி (02080) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.