Header Ads

தினசரி காலண்டர் மற்றும் இன்றைய ராசி பலன்!!!


✍️ | மகிழ்மதி.

ஸ்ரீ சார்வரி ஆண்டு – புரட்டாசி 28 - புதன்கிழமை (14.10.2020)

நட்சத்திரம் : பூரம் மாலை 6.51 வரை பின்னர் உத்திரம்
திதி : துவாதசி காலை 8.38 வரை பின்னர் சதுர்தசி
யோகம்: மரண - சித்த யோகம்
நல்லநேரம்: காலை 9.15 - 10.15 / மாலை 4.45 - 5.45

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்


மேஷ ராசி அன்பர்களே, மாறுபட்ட யோசனைகள் மனதில் உதிக்கும். தடைபட்ட திருமண காரியம் கைகூடும். அக்கம் பக்கமா வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். பல நாள் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி அன்பர்களே, வீட்டில் வரவும், செலவும் சரிசமமாக இருக்கும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தை வழி நடத்தும் சாமர்த்தியம் உண்டாகும். எதிரிகள் பலம் இழந்து போவர். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து இணைவர். வீட்டில் சில பண விரையம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பெற்றோர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

துலாம் ராசி அன்பர்களே, குடும்ப வருமானத்தை உயர்த்த முடியும். மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போடவேண்டாம். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி அன்பர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் நாள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வரமால் நின்று போன பணம் கைக்கு வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே, பிரியமானவர்களுக்காக இயன்ற அளவு உதவுவீர்கள். வாக்கு சாதுரியம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சீராகும்.

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்கவும். சொத்து வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.,

கும்ப ராசி அன்பர்களே, அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி அன்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். பெண்கள் விஷயங்களில் சற்று கவனமாக செயல்படவும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

No comments

Powered by Blogger.