Header Ads

முயல் வேட்டையாட முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.


கயத்தாறு அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக நேற்று அதிகாலை கோவில்பட்டி வனச்சரகர் எஸ்.சிவராமுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனவர் எஸ்.நாகராஜன், திருநெல்வேலி வனவர் ஆர்பாலசுப்பிரமணியன், வனபாதுகாப்பாளர்கள் எம்.சுதாகர், எம்.சுகுமார், எம்.பேச்சிமுத்து, எஸ்.அருண் ஆனந்த், எம்.குமார் உள்ளிட்ட கொண்ட குழு கயத்தாறு அருகே உள்ள வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டன. 


கயத்தாறு அருகே அய்யனார்ஊத்தில் இருந்து மானாங்காத்தான் இடையே 10 பேர் முயல் வேட்டையாடுவதற்காக வேட்டை நாய்கள், கன்னிகள் மற்றும் கம்புகளுடன் பதுங்கி இருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகலாபுரத்தை சேர்ந்த சிவன்பெருமாள்(45), அவரது மகன் கருப்பசாமி(24), தடியன்பட்டியை சேர்நத் செல்லத்துரை மகன் அய்யனார்(19), கனி(24), செந்தூர்பாண்டி மகன் சௌந்தர்(24), சந்தனம்(40), மலையாண்டி மகன் பாலு (30), முருகன் (45), வெள்ளைச்சாமி மகன் செல்லப்பாண்டி(32), மாரியப்பன்(55) ஆகிய 10 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து முயல் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கன்னிகள், கம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. 


வனப்பகுதியில் இருந்து வன விலங்குகளை வேட்டுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அதனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரகர் சிவராம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.