இன்றைய (12 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* "பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளருக்கு தனி நலவாரியம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற பேருந்துகளில் இதுவரை 97,061 பேர் பயணம் செய்துள்ளனர்; சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 82,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்!
* மோகன்லால் குழுமத்தில் வருமானவரித் துறை சோதனை: ₹500 கோடி மதிப்புள்ள கணக்கில்வராத வருவாய் கண்டுபிடிப்பு.
* உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான, நூறு விழுக்காடு இடங்களின் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையையும், மீண்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும். அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். இது குறித்து சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்.
* டிஜிட்டல் ஊடகங்கள் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும்-மத்திய அரசு தகவல். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் டிஜிட்டல் செய்தி, ஓடிடி இயங்கு தளம் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்கள் செயல்படும் என்று உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
* கொசு கடியால் தவிக்கும் மக்கள்? சென்னை மாநகராட்சி மக்கள் மீது கருணை காட்டுமா?
சென்னையில் கொரோனா தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு அப்பாடி தப்பித்தோம் என நினைத்து முடிவதற்குள் அடுத்த பயம் தொற்றி கொண்டது.
தற்போது மழைக் காலம் தொடங்கி விட்டது. அவ்வப்போது மழை பெய்தும் வருகிறது. மழையின் காரணமாக தற்போது கொசுக்களின் அராஜகம் கொடி கட்டி பறக்க தொடங்கி விட்டது.
மின் விசிறி போட்டு கொசு வர்த்தி அல்லது லிக்கியூட் போட்டாலும் இரவு நேரங்களில் பறந்து பறந்து கொசுக்கள் மனிதனை கொத்தி வறுத்து எடுப்பதால் பலரின் தூக்கம் களைந்து போய் உள்ளது. மேலும் கொசுக்கடியால் எங்கே காய்ச்சல் வருமோ? என்ற அச்சம் மக்களுக்கு நிலவி வருகிறது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தெருக்களில் தினமும் கொசு மருந்து அடித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
No comments