Header Ads

இன்றைய (16 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* பொதுமக்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்! தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால்..கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. -தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை. சென்னை-5.

* பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்! தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம், அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* மதுரையில், வரும் 20ந்தேதி மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை - தனி கட்சி தொடங்க திட்டம்.

* சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு. பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை. 10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்.

* அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 21 & 22 மற்றும் டிசம்பர் 12 & 13 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கம் / திருத்தம் ஆகிய பணிகளுக்காக சிறப்பு முகாம்கள். 01-01-2021 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 20-01-2021 அன்று வெளியிடப்படும். - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

* வரும் 23ம் தேதி கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

* வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு ஓர் வேண்டுகோள் பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்கள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள்.

* பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்! தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.  குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது,  மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது  நீர்நிலைகளில் குளிக்க கூடாது. - மாநில பேரிடர் மேலாண்மை முகமை.

* செம்பரம்பாக்கம் ஏரி! நீரை வெளியேற்றுவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. 2015 பெருவெள்ளத்தை போன்ற ஆபத்து வராது என்கிறார்கள் அதிகாரிகள். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை.

No comments

Powered by Blogger.