இன்றைய (20 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
* நெல்லையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான பூங்கோதை ஆலடிஅருணா, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.
* அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்ஸில் ஏராளமானோர் நுழைந்ததால் இடையூறு. வழக்கு விசாரணை நிறுத்தம்.
காணொலியில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
டிவி மற்றும் வீட்டில் பேச்சு சத்தங்களால் தங்களால் விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை என நீதிபதிகள் அதிருப்தி.
* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரிப்பு: டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் சென்னை அல்லது கோவாவுக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
ஆஸ்துமா பிரச்சினை காரணமாக சோனியா காந்தி தற்போது டெல்லியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சோனியா காந்தி உடன் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி செல்ல உள்ளதாக தகவல்.
* திட்டங்குளம் கருப்பசாமி மறைவு வைகோ இரங்கல்:
கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, இந்தியப் படை வீரராக லடாக் எல்லையில் பணியில் இருந்தபோது, ஊர்தி மோதலில் இறந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
34 வயதான கருப்பசாமிக்கு, ஐந்து வயது, ஏழு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமியின் திடீர் மறைவால், அந்தக் குடும்பம் மட்டும் அல்ல, திட்டங்குளம் கிராமமே வேதனையில் ஆழ்ந்துள்ளது.
எத்தனையோ முறை அந்தக் கிராமத்திற்குச் சென்று இருக்கின்றேன். அங்கே, அனைவரையும் நன்கு அறிவேன். அவர்களுடைய வேதனையில், நானும் பங்கு ஏற்கின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கருப்பசாமிக்கு வீரவணக்கம் செலுத்துகின்றேன்.
* உதயநிதி ஸ்டாலின் கைது வைகோ கண்டனம்: திருக்குவளையில் பொதுமக்களைச் சந்திக்க முயன்ற, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்தது, கடும் கண்டனத்திற்கு உரியது.
* தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்.
* நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது செல்பி எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
No comments