26 நவம்பர் 2020, வியாழக்கிழமை முதல், தமிழகம் முழுவதும் மிக அதீத கன மழைக்கு வாய்ப்பு...
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* இலங்கை தீவின் தென் கிழக்கு பகுதியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த புயல், இலங்கையின் திரிகோண மலை, ஜாப்னா வழியாக சேது சமுத்திரம் கடந்து, தொண்டி மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடயே தமிழகத்தினுள் நுழைந்து அதீத கன மழையை பலத்த காற்றுடன் கொடுக்கும் என சர்வதேச வானிலை மையம் தரவுகள் வெளியிட்டுள்ளது.
* இந்த புயலால் தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா மற்றும் கேரளாவிற்கும் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...
* தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், மலைப்பகுதிகளில் பல்வேறு பகுதிகள் மரங்கள் விழுந்து, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது...
* தமிழக அரசும், அந்த அந்த மாவட்ட கோட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் உதவி பெறவும், மின் கம்பங்கள், மின் மாற்றிகள், , நெடுஞ்சாலை சீரமைப்பு இயந்திரங்களை ஆங்காங்கே முகாமிட்டு தயார் நிலையில் அரசு இயந்திரம் இருக்க கோரிக்கை எழுந்துள்ளது...
No comments