Header Ads

மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .


✍ | -ராஜாமதிராஜ். 

இயற்கை மருத்துவ தினம் இன்று கடைபிடிக்கப்படும் இலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையின் சார்பில் இயற்கை வாழ்வியல் முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மருத்துவர் கோவிந்தராஜ், இயற்கை மருத்துவர்கள் செல்வம், சபிதா, உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உண்ணா நோன்பு நோன்பும் சக்தியும் என்ற தலைப்பில் கருத்துக்களை எடுத்துக் கூறினர். வாரத்தில் ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பது, தொடர்ச்சியாக ஏழு நாட்கள் உண்ணாநோன்பு இருப்பதால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்தும் அதில் உள்ள அறிவியல் பூர்வமான உண்மைகள் எடுத்துக் கூறப்பட்டது மேலும் உண்ணா நோன்பு நான் இருப்பதன் மூலம் உடலில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சனை, குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் இயற்கை மருத்துவத்தில் பஞ்ச பூதங்கலுக்கு உள்ள தொடர்பு இயற்கை உணவு முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பானம், இயற்கை உணவு ,மருத்துவ குணம் கொண்ட வாசனைத் தைலம் வழங்கப்பட்டது .நீராவி முகக் குளியல் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.