வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை.
✍ | -ராஜாமதிராஜ்.
உதகை அருகே மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் தீபாளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப் பகுதியை கொண்டது. இந்த பகுதியில் ஏராளமான யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை மற்றும் அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பதால் வனப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின கிராமங்களில் பல்வேறு கட்டுபாடுகள் அமல்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 14-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது. அதனை முன்னிட்டு புலிகள் காப்பகத்திற்குள் உள்ள வன கிராம மக்கள் யாரும் பட்டாசு வெடிக்க கூடாது என தடைவிதித்து முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக மசினகுடி, மாயார், சிங்காரா, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சிறியூர், ஆனைக்கட்டி உள்பட அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமத்தினரும் பட்டாசு வெடிக்க கூடாது எனவும், பட்டாசு வெடித்தால் அந்த சத்தம் கேட்டு வன விலங்குகள் அச்சபடுவதுடன், வாழ்வியல் முறை பாதிக்கக் கூடும் என்பதால் பட்டாசு வெடிக்க தடைவிதித்து இருப்பதாகவும் மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 2 தனி படை அமைத்துள்ளதாகவும் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments