கல்விச்செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* தமிழகத்தில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 11ல் முதல்வர் அறிவிப்பு: தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்குப்பின் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் விரைவில் முடிவை அறிவிப்பார் என்று மாநில பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
* மருத்துவக் கலந்தாய்வுக்கு 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரசு ஒதுக்கீடுக்கு இதுவரை 17,239 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8494 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
* இந்தியா முழுவதுமுள்ள 33 சைனிக் பள்ளிகளில் அடுத்த வருடம்( கல்வியாண்டு 2021-22) 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத்தேர்வு 2021, (ஏஐஎஸ்எஸ்ஈஈ) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கெடுக்கும் வகையில் வரும் ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ மாற்றக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
* இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
* நீதிமன்ற வழக்குகள் காலதாமதம் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளரிடம் நிதி இழப்பு வசூலிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வழக்கிற்கும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரே முழு பொறுப்பாகும்- பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
* அனைத்து பள்ளிகளிலும் EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை சரிபார்க்க உத்தரவு.
* அண்ணா பல்கலை., பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படும்: உயர் நீதிமன்றம் உத்தரவு .
* தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது.
No comments