முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* நெல்லை: மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நெல்லை மாவட்ட கூடுதல் நீதிமன்றம். 2014 -ம் ஆண்டு நெல்லை முன்னிர்பள்ளம் என்ற பகுதியில் குருநாதன் என்பவர் தனது மகன் கார்த்திகேயனை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் வழங்கி தீர்ப்பளித்தது
* திருவள்ளூர் ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய தடுப்பணை உடைந்து நீர் வெளியேறிவருகிறது. ஆண்டார்மடம் பகுதியில் ரூ. 14 கோடியில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை உடைந்து கிராமத்துக்குள் மழைநீர் புகுந்து வருகிறது. பழவேற்காடு -ஆண்டார்மடம் சாலை உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் 300 -க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு
* திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 11000 வாத்துக்கள் உயிரிழந்தது. பெரிய கொமேஸ்வரம் பாலாறு படுகையில் வாத்து அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் வாத்துகள் அடித்து செல்லப்பட்டன. முனிரத்தினம் என்பவரின் 11000 வாத்துக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
* செங்கல்பட்டு அருகே லத்தூர் கிராமத்தில் கூலித் தொழிலாளிகள் 2 பேர் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து லாத்தூரில் பண்ணை வீடு ஒன்றில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த இருவரது பெயர்களும் ராஜேஷ் ஆகும்.
* சென்னை: கீழ்ப்பாக்கத்தில் ஆர்மேனியா தூதரகம் உள்ள ஈவிஆர் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீருடன் கழிவு நீர் கலக்கிறது. அப்பல்லோ பர்ஸ்ட்மெட் மருத்துவமனை மற்றும் நெய்வேலி இல்லம் அருகே மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. மருத்துவமனை சாலையில் கழிவுநீர் கலந்த மழைநீர் வடியாததால் நோயாளிகள் வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
* கடலூர்: நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகனின் உடல் மறு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 மருத்துவக்குழு முன்னிலையில் உடற்கூறாய்வு நடந்தது.
*நாகை அருகே மணல் குவாரியில் தேங்கிய மழை நீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு:
* சென்னை ஆவடியில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழந்ததால் சோகம்!
* தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு ‘கைதுக்கு முன்னும், கைது மற்றும் காவல் அடைப்பு நிலையில் நீதிக்கான அணுகுமுறை” (Early Access to Justice at Pre - arrest, Arrest and remand stage) குறித்து தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி கனம் சாமுவேல் பெஞ்சமின், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு பயிற்சி வழங்கினார்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
* திண்டுக்கல் நிலக்கோட்டையில் சப்- இன்ஸ்பெக்டர் டீ கடையில் வாங்கிய வடையில் பிளேடு இருந்தால் அதிர்ச்சி. உணவு பாதுகாப்பு அலுவலர் டீ கடையில் ஆய்வு.
* திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் எரியோடை அடுத்த கோவிலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சத்யபிரியா பாலமுருகன் (மெடிக்கல் பாலு (எ)பாலமுருகன் வீட்டில் ரூ 3,95,000 மற்றும் 12பவுன் திருட்டு எரியோடு போலீசார் விசாரணை.
* திண்டுக்கல்: பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் உடற்கல்வி இயக்குனருக்கு பாராட்டு வழங்கும் விழா நடைபெற்றது.
* சென்னையில் உள்ள ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!! பல கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வேறு கணக்குகளுக்கு மாற்றியதாக புகார்!.
* அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான புகார்கள் குறித்து இன்று முதல் நேரடியாக புகார் அளிக்கலாம். புகார் கொடுத்தவர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி விசாரணை - நீதிபதி கலையரசன் அறிவிப்பு.
* தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் - பிரேமலதா
No comments