டிசம்பர் 28ல் வளிமண்டல சுழற்சியால் தென்மாவட்டங்கள், நாகை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு!
டிசம்பர் 28ல் வளிமண்டல சுழற்சியால் தென்மாவட்டங்கள், நாகை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர் 29, 30 தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
No comments