Header Ads

இன்றைய முக்கிய செய்திகள்


* இடஒதுக்கீடு நிலைப்பாட்டைப் பொறுத்தே கூட்டணி முடிவு" - பாமக தலைவர் ஜி.கே. மணி.

* அழகிரி கட்சி துவங்கினால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும். அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று. - செல்லூர் ராஜு.

* ஆளும் அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது, அதனால் தான் எதிர்க் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு தடை விதிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சொந்தக் கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். அதனால், அதிமுக-வினர் ஒற்றுமையாகச் செயல்பட்டு தேர்தலை சந்திப்பார்களா என்பதே சந்தேகம்தான். - வேல்முருகன்.

* 'விஜய் டிவி புகழ்' வர்ணனையாளர் ஆண்ட்ரூஸ் மாமனார் ஜோசப், திருச்சி சாலையோரத்தில் பிணமாக மீட்பு.

* கொரோனா தொற்று இல்லை. சளி, காய்ச்சல் என்று இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நலமாக உள்ளேன். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தகவல்.

* நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் அதிகாரிகளின் ஐஏஎஸ் பதவியை பறிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து. ஓய்வூதியத்தில் மாதம் ரூ.200 பிடித்தம் செய்யும் உத்தரவை எதிர்த்து முன்னாள் நகராட்சி ஆணையர் வழக்கு.

* அரசு வாகனங்களில் தேவையற்ற உதிரி பாகங்களை நீக்க அறிவுறுத்தி அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம்.

* தமிழகத்தில் வரும் 28, 29-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை (கோவை) 1 செ.மீ மழைப்பதிவு.

* “ஓ.பன்னீர்செல்வத்துக்கு கேரளாவில் 2,000 கோடி சொத்து; ஊழல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” - தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தல்!

* சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம். மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் விதிகளை மீறி 5,574 கட்டடங்கள் - ருக்மாங்கதன் என்பவர் வழக்கு. விதிமீறிய கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. -சென்னை மாநகராட்சி.

* புதுச்சேரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை - பிரதமர் மோடி.

* ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் அரசாங்கம் நடத்துகின்றனர்.

* ஜம்மு -காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு.

* நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும். பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை - மருத்துவமனை.

No comments

Powered by Blogger.