Header Ads

20 முதல் 40 வயதுடையவர்கள் மூலம் கொரானா பரவல் அதிகரிப்பு உலக சுகாதாரா நிறுவனம் தகவல்

20, முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாகவும்  எச்சரித்துள்ளது.   இதன் மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்கும் முதியோரும் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய் பரவல் மாற்றம் அடைந்துள்ளதாகவும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ரஷியா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள சூழலில், அதனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Powered by Blogger.