சுமார் 400 ஆண்டுகள் பழமையான தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு.
✍ | ராஜாமதிராஜ்.
கிருஷ்ணகிரியில் உள்ள சுங்கச்சாவடி அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமையான சையத் பாஷா தர்கா உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி மட்டுமன்றி அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். ஆனால், இப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், தர்கா பூட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தர்கா கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை அப்படியே தூக்கிச்சென்று, தர்காவின் பின்புறம் வைத்து, உண்டியலின் பூட்டையும் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். வழக்கம்போல் இன்று தர்காவுக்கு வந்த நிர்வாகி நசீர், திருட்டு சம்பவம் குறித்து தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மர்ம கொள்ளையர்கள் குறித்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தர்காவின் உண்டியல் திறக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டதால், இப்போது உண்டியலில் தோராயமாக மூன்று லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் என்று தர்கா கமிட்டியினர் தெரிவித்தனர்.
No comments