Header Ads

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை


   ✍  |   ராஜாமதிராஜ்.

ஸ்டெர்லைட் ஆலையை உடன் அப்புறப்படுத்தவும், அனில் அகர்வால் இந்தியாவில் நடமாட தடை விதிக்க அவசர கால நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியானதே என உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

தீர்ப்பை பெற்றுத் தந்த தமிழக அரசுக்கும், துணை புரிந்த அனைத்து அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிகப் பெரும் மனித அழிவை ஏற்படுத்தி வந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் வீர மரணமடைந்த 13 தியாகிகளின் தியாகத்திற்க்கும், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கும் கிடைத்த நீதி ஆகும். 

ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுவெளிபாட்டால் பல நூறு மனித உயிர்கள் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் தாக்குதல்களால் பலியாகி உள்ளனர். 

பல ஆண்டு காலம் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் நிம்மதி இழந்து  உயிர் காக்க போராடி வந்துள்ளனர்.

இவையெல்லாம் மக்களின் ஒன்றுப் பட்ட உச்சக்கட்ட போராட்டத்திற்கு பிறகு தான் பேரழிவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதனை துவக்கத்தில் ஆட்சியாளர்கள் உணர மறுத்தாலும், இறுதியில் அரசு உறுதியோடு சட்ட நடவடிக்கை மேற்க்கொண்டதின் மூலம் நீதி வென்றுள்ளது.

எனவே தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல் பேரழிவிற்கும், மனித அழிவிற்கும்,பெரும் துயரத்திற்கும் காரணமான வேதாந்தா நிறுவன நாசக்கார ஸ்டெர்லைட் ஆலை  உரிமையாளர் அனில் அகர்வாலை கொலை குற்றவாளியாக அறிவித்து தமிழத்தில் மட்டுமின்றி இந்தியாவில் நடமாட தடை விதித்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை போர்க்கால அடிப்படையில் உடன் அப்புறப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

இனி இந்திய மண்ணில் வேதாந்தா நிறுவனத்திற்கு எந்தவொரு தொழில் நடத்தவும் அனுமதி வழங்க கூடாது என பாராளுமன்றம் மூலம் தடை விதிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து குரல் கொடுத்து விரட்டியடிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேற்க்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.