Header Ads

உலகிலேயே முதல் இளம் வயது பெண் பிரதமர்

(சன்னா மிரெல்லா மரின், 34)

எழுத்து- முகன்.

சன்னா மிரெல்லா மரின் 16 நவம்பர் 1985 அன்று ஹெல்சின்கியில் பிறந்தார். அவர் தம்பேரேவுக்குச் செல்வதற்கு முன்பு எஸ்பூ மற்றும் பிர்கலா ஆகிய இடங்களில் வசித்து வந்தார்.

அவரது சிறு வயதில் தந்தை குடி பழக்கத்திற்கு அடிமையாகி பெற்றோர்கள் பிரிந்தனர்.  குடும்பம் வறுமையில் சென்று பல சிக்கல்களை எதிர்கொண்டது. அவரது பெற்றோர் பிரிந்த பிறகு, மரின் அவரது தாயார் மற்றும் அவரது பெண் நண்பர்களின் உதவியில் வளர்ந்தார்.

மரின் 10 டிசம்பர் 2019 முதல் பின்லாந்து பிரதமராக இருந்து வருகிறார். சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான இவர், 2015 முதல் பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2019 ஜூன் 6 முதல் 2019 டிசம்பர் 10 வரை போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.

2019ல் அஞ்சல் வேலைநிறுத்தத்தை அடுத்து ஆண்டி ரின்னே ராஜினாமா செய்த பின்னர், மரின் உலகிலேயே முதல் இளம் வயது பெண் பிரதமர் ஆவார்.


No comments

Powered by Blogger.