Header Ads

பெண் என்பவள் இயற்கையாகவே பொறுப்பு மிகுந்தவள் யானை இனத்திலும் அப்படித்தான்!


எழுத்து- முகன்.

தற்போது பூமியில் உள்ள விலங்கினங்களில் யானை தான் மிக பெரியது. உலகில் ஆப்பிரிக்கன் யானை மற்றும் ஏசியன் யானை என இரண்டு பெரிய இனங்களும் மற்ற சில சிறு இனங்களும் உள்ளன.

ஆப்பிரிக்கன் யானைகள் 8.2 அடி முதல் 13 அடி வரை உயரமாகவும் 2268 கிலோ முதல் 6350 கிலோ வரை இருக்கும். மத்திய மற்றும் மேற்க்கு பகுதி மழை காடுகளில் அதிகமாக மிகப்பெரிய கூட்டமாக வாழ்ந்து வருகிறது. இதன் ஆயுட்காலம் சராசரியாக 70 ஆண்டுகள்.

ஏசியன் யானைகள் 6.6 அடி முதல் 9.8 அடி வரை உயரமாகவும் 2041 கிலோ முதல் 4990 கிலோ வரை இருக்கும். நேபாளம், இந்தியா, தாய்லாந்து மற்றும் பல கிழக்காசிய நாடுகளில் புதர்காடுகள், மழை காடுகளில் கூட்டமாக வாழ்ந்து வருகிறது. இதன் ஆயுட்காலம் சராசரியாக 60 ஆண்டுகள்.

யானைகள் ஒரு நாளைக்கு 16மணி நேரங்கள் செலவிட்டு 60 முதல் 70 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன. காய்கனி, புற்கள், கிழங்கு வகைகள் மட்டும் உட்கொள்ளும். மாமிசம் உட்கொள்ளாது.

கூட்டத்தில் யானை குட்டிகள், ஆண் மற்றும் பெண் யானைகள் வயதான பெண் யானையின் வழிகாட்டுதலின் படி தான் பின்தொடரும். ஒவ்வொரு கூட்டத்திலும் 6-20 யானைகள் இருக்கும். அதிகமான யானைகள் இருந்தால் தனி குழுவாகி மந்தையாக ஒரே இடத்தில வாழ்ந்து வரும்.

வயதான பெண் யானை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு கால சூழ்நிலைக்கேற்றவாறு உணவு, தண்ணீர் கிடைக்கும் இடங்களுக்கு அழைத்து செல்லும். ஒரு யானை 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஒலி எழுப்பினால் மற்ற யானை அந்த ஒலியை கேட்கும் திறனுடையது.

பொதுவாக யானைகள் ஒன்றோடுஒன்று பாசத்தோடும் அன்போடும் பழகும் குணம் உடையது. மனிதர்களால் கேட்கமுடியாத மிக சிறிய ஒலி அளவைகூட யானைகள் கேட்கும்.

கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு யானையும் தன் குழுவையும், சுற்றுசூழலையும் உற்று கவனிக்கும். அவைகள் தானாகவே மற்ற யானைகளின் மீது அதிக கவனம் செலுத்தும். மிகுந்த புத்தி கூர்மையுடனும், முன்னெச்செரிக்கையுடனும் செயல்படும்.

யானைகள் 8 - 13 வயது முதல் உறவில் ஈடுபடும். பெண் யானையின் கர்ப்ப காலம் 22 மாதம் இந்த இடை பட்ட காலத்தில் ஆண் யானை தனியே சென்று வேறு சில ஆண் யானை குழுவில் சேர்ந்து  மனைவிக்கு தேவையான உணவை கொண்டு வந்து கொடுக்கும். யானை குட்டிகள் 68 - 158 கிலோவும் 3 ஆடி உயரமும் இருக்கும்.

வயதான ஆண் யானை கூட்டத்தில் சேராது, தனித்தே செல்லும்.

குறிப்பு: உலக வனவிலங்கு நிதியத்தின்படி, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகளின் உயிர்வாழலுக்கு எதிரான அச்சுறுத்தல்களில் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை  இன்று பெரும் சவாலாக இருந்து வருகிறது.

No comments

Powered by Blogger.