இந்தியாவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசுக்கு முகேஷ் அம்பானி கோரிக்கை

இந்திய
அலைபேசி தொலைதொடர்பு அமைப்பின் 25வது ஆண்டுவிழாவையொட்டி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மத்திய தொலைதொடர்பு அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத்தி கோரிக்கைகளை வைத்துள்ளார்.
அதில்,
உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தில் கால்பதித்து இருக்கும் சூழலில், இந்தியாவில் இன்றும் 30 கோடி
மக்கள், 2ஜி செல்போன்களை பயன்படுத்தி வருவதாக
குறிப்பிட்டுள்ளார்.
இதனால்
அவர்களுக்கு முழுமையான டிஜிட்டல் புரட்சி சென்று சேரவில்லை எனவும், விரைவில், 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து அனைத்து
இந்தியர்களையும் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்குள் கொண்டு
வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அப்போது தான் பிரதமர் மோடியின் டிஜிட்டல்
இந்தியா திட்டம் முழுமையடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments