Header Ads

பிரியாணி தராத ஆத்திரத்தில் நள்ளிரவில் பூட்டிய கடையை சேதப்படுத்திய இளைஞர்கள்.....

 

✍  |   ராஜாமதிராஜ்.

கரூர் தெற்கு காந்தி கிராமம் இந்திரா காந்தி நகரில் வசிப்பவர் கிருஷ்ணன். இவர் கரூர் - திருச்சி சாலையில் காந்தி கிராமம் கடைவீதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். 

கடந்த சனிக்கிழமை அன்று இரவு 10 மணியளவில் கடைக்கு வந்த 2 இளைஞர்கள் பிரியாணி கேட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் ஐயப்பன், பூமணி, தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் இருந்துள்ளனர். இது தொடர்பாக கடை ஊழியர்களுக்கும், பிரியாணி கேட்டு வந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கடை உரிமையாளர் கிருஷ்ணன் இளைஞர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் கடை திறக்கவில்லை நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்க வந்த போது கடையின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த 2 மேஜைகள், சி.சி.டி.வி கேமராக்கள் உடைக்கப்பட்டிருபதை பார்த்த உரிமையாளர் கிருஷ்ணன் சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். 

இதனையடுத்து பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் தான் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை உறுதி செய்த உரிமையாளர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிசிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு தகராறில் ஈடுபட்ட தெற்கு காந்தி கிராமம் சக்தி நகரை சார்ந்த கார்த்திகேயன், அவரது தம்பி யுவராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவண பாபு முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து சகோதரர்கள் இருவரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.