முக கவசம் அணியசொன்ன நகராட்சி மேற்பார்வை யாளருக்கு அடி உதை....
✍ | ராஜாமதிராஜ்.
சென்னை அடுத்த தாம்பரம் நகராட்சி சார்பில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் பழைய ஜி.எஸ்.டி. சாலையில் பொதுமக்கள் முகாகவாம் அணிந்து செல்கிறார் களா என நகராட்சி மேற்பார்வையாளர் குமாரசாமி சோதனை பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது அருள் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் முகக்வசம் அணியாமல் சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய குமாரசாமி ஏன் முகளவசம் அணியவில்லை என தினஸை கேட்டுள்ளார். அதற்கு தான் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் என கூறி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி மேற்பார்வையாளர் மற்றும் சதீஸ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலபில் முடிந்தது.
நடுரோட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் நார்க்காலியால் தாக்கிகொண்டனர். இதனைக்கண்ட பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்நிலையில் தாம்பரம் நகராட்சி மேற்பார்வையாளர் குமாரசாமி தாக்கப்பட்டது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் மொய்தீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
No comments