Header Ads

முககவசம் மற்றும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

✍  |   ராஜாமதிராஜ்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அமைச்சர் காமராஜ் இல்லம் மற்றும் மேல மரவாக்காடு கிராமத்தில் மாற்று கட்சியினர் குடும்பத்துடன் அதிமுகவில் இணையும்  நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் 

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற உணர்வுடன் மாற்று கட்சியினர் சாரை சாரையாக அதிமுகவில் இணைவதாக தெரிவித்தார்.

கொரோன நேரத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றி தமிழகம் முழுவதும் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்து வருவது 2021இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும்

கடந்த 7ஆண்டுகளாக அணைகள் முழுமையாக நிரம்பாத நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அனை நிரம்பி ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு நீர் கடைமடை பகுதிகளை சென்றடைந்து. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகம் பெய்ததால் அவபோது அணை திறக்கப்படாமல் இருந்ததாகவும்  குறைந்த அளவு நீர் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்த அமைச்சர் அனைத்து பகுதிகளுக்கும் எந்தவித பிரச்சினையும் யின்றி நீர் வழங்கப்படும் என தெரிவித்தார்.


தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர்கள் உரிய நேரத்தில் அந்தந்த பகுதிகளை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டாவது  தலைநகரம்,தலைமை செயலகம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருவதாகவும் இதனை விவதபொருளாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே முகாகவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் காமராஜ் முகாகவாசம் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களும் தரத்தை உறுதி செய்த பின்னர் தான் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் கூடுதலாக வழங்கப்படும் 5கிலோ அரிசியில் தேவையின் அடிப்படையில் 5 கிலோ அரிசியில் 1கிலோ கோதுமை பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா பரவலை தடுக்க திருவாரூர் மாவட்டத்தில் நாள் தோறும் 70மருத்துவ முகாம்கள் நடத்தப் படுவதாகவும் தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.