Header Ads

முகாகவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தி விழிப்புணர்வு....

 

✍  |   ராஜாமதிராஜ்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றது இதுவரை 4555 பேர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பெரும்பாலானோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமலும் பொதுஇடங்களில் சுற்றி திரிகின்றனர்.

இந்நிலையில் இதனை தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி போக்குவரத்து காவல்துறையினர் நூதன முறையில் முக கவசம் அணியாமல் சாலைகளுக்கு வருபவர்களை சுகாதாரத் துறையினர் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனுப்புகின்றனர், போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்ற செயலால் கொரோனா பரிசோதனைக்கு பயந்து முக கவசம் அணிந்து செல்ல தொடங்கியுள்ளனர் மேலும் காவல்துறையினரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.