தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராணிப்பேட்டை இன்று தமிழக அரசின் சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக ராணிப்பேட்டை சென்றார்.
முதலமைச்சர் செல்லும் வழியில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பொன்னேரி கரையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் .பொன்னைய, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் சரவணன், மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்று பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.
அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக தமிழக முதல்வருக்கு மாலை அணிவித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
No comments