Header Ads

டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் செல்லலாம் கட்டணம் எவ்வளவு தெரியுமா.....



 ✍️ | ராஜாமதிராஜ்.

அதினாவின வளர்ச்சியின் மூலம் ஓரிடத்தில் இருந்து தொலைதூர இடங்களுக்கு விமானங்கள் மூலமாக மிக எளிதாக சென்று வர முடிகிறது.  இந்த ஊரடங்கு காலத்திலும் சிலர் தங்களது ஓய்வு நேரத்தில் பைக் கார் உள்ளிட்ட வாகனங்களை தவிர்த்து மிதி வண்டிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பேருந்து மூலம் சாலை மார்க்கமாக பயணம் செய்து பல்வேறு நாடுகளை சுற்றி பார்ப்பதை விரும்புபவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.

பேருந்தில் உலகை சுற்றி பார்க்க நினைப்பவர்களுக்காகவே ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்று, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பேருந்து சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த பேருந்தில் நீங்கள்பயணம் செய்தால், 18 நாடுகளை பார்க்கலாம். இந்த பயணத்தின் மொத்த தொலைவு சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர்கள். பயணம் நிறைவு பெற 70 நாட்கள் ஆகும். அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் (Adventures Overland) என்ற தனியார் சுற்றுலா நிறுவனம்தான் டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவையை அறிவித்துள்ளது. இதற்கு 'பஸ் டூ லண்டன்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவை தேர்வு செய்யும் பயணிகள், மியான்மர், தாய்லாந்து, சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் உள்பட 18 நாடுகளின் வழியாக பயணம் செய்யலாம். இந்த பயணத்திற்காக 20 இருக்கைகள் மட்டுமே கொண்ட பேருந்து பயன்படுத்தப்படும்.

எனவே 20 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த 20 பயணிகள் தவிர ஓட்டுனர், உதவி ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள். இந்த நீண்ட பயணத்தின் போது குறிப்பிட்ட இடைவெளிகளில் சுற்றுலா வழிகாட்டிகள் மட்டும் மாறி கொண்டே இருப்பார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்தந்த நாடுகளை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகள் . உலகின் பல்வேறு நாடுகளின் வழியாக பயணம் செய்ய வேண்டியுள்ளதால், விசா தேவைப்படும். ஆனால் பயணிகளின் விசா பற்றிய விஷயங்களை எல்லாம் அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் பார்த்து கொள்ளும். வசதியுள்ளவர்கள் மத்தியில் இந்த பேருந்து பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயணமானது மொத்தம் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். இதில், தங்களுக்கான விருப்பமான மற்றும் சௌகரியமான இடங்களை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட பேக்கேஜிற்கு உண்டான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஆனால் டெல்லியில் இருந்து லண்டன் வரை மொத்த பயணத்தையும் மேற்கொள்ள விரும்பினால், ஒரு நபருக்கு ரூ.15 லட்சம் செலாகும் என கூறப்படுகிறது.

எனவே வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த பேருந்து பயணத்தை மேற்கொள்ள முடியும். டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு முதல் பேருந்து வரும் 2021ம் ஆண்டு மே மாதம் புறப்படும் என நம்பப்படுகிறது. இந்த 70 நாட்கள் பயணத்தின்போது பயணிகள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

பயணிகள் தங்குவதற்கு 4 நட்சத்திர அல்லது 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகளில் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். அத்துடன் அனைத்து நாடுகளிலும் இந்திய உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த பயணம் பயணிகளுக்கு கண்டிப்பாக உற்சாகம் அளிக்க கூடியதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments

Powered by Blogger.