மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு நீட் தேர்வு ரத்து செய்ய அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
திராவிடர் கழகத் தலைமை பேச்சாளர் அன்பழகன் மாவட்ட அமைப்பாளர் ஆர்எஸ் அன்பழகன் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வை கௌதமன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
No comments