சித்த மருத்துவ சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
✍ | ராஜாமதிராஜ்
கொரானா வைரஸ் நோயை தடுக்க சித்த மருத்துவ சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொரானா சிறப்பு வார்டின் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட சித்தா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், இது போல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு சித்தா பிரத்தியோக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளதாகவும் கூறிய அமைச்சர் , சித்தா சிகிச்சைக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் கூறினார்..
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments