Header Ads

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி டிஐஜி ஆனி விஜயா எச்சரிக்கை!!!

 

✍  |   ராஜாமதிராஜ்

விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி இந்து அமைப்புகள், வழிபாடுகள் நடத்தவேண்டும்.

விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..... 

திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா எச்சரிக்கை.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகளுடன்  ஆலோசனை கூட்டம் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய இந்து அமைப்பினர் விநாயக சதுர்த்தி விழாவின் போது சமூக இடைவெளியோடு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவும். அதை சமூக இடைவெளி விட்டு நான்கு பேர் மட்டும் நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த திருச்சி சரக டிஐஜி  ஆனி  விஜயா தமிழக அரசு கொரோனா காலமாக இருப்பதால் அனைவரின் பாதுகாப்பையும் கருதி ஒரு வழிமுறைகளை வகுத்து அரசாணையாக பிறப்பித்துள்ளனர். அந்த அரசாணைப்படி தான் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட வேண்டும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழக அரசு வழக்கம்போல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு பல்வேறு விதிமுறைகளை விதித்து அரசாணையாக பிறப்பித்துள்ளது. அந்த அரசாணைப்படி தான் இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து விழாவை கொண்டாட வேண்டும். மேலும் விநாயகர் சிலைகளையும் எவ்வாறு அமைக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் அமைக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையில் அரசு தெரிவித்துள்ளது அதன்படிதான் நடக்க வேண்டும்.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி நடக்கவில்லை என்றால் சட்டத்தின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 56 செக் போஸ்ட்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 

ஐந்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு பணி என்பது தொடர்ந்து நடைபெறும்  என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.