மத்திய மாநில அரசுகளை கண்டித்து மின் வாரிய சங்கங்கள் ஆர்பாட்டம்
✍ | ராஜாமதிராஜ்.
திருவாரூரில் மின்வாரிய சங்கங்கள் கூட்டாக இனைந்து நடத்திய ஆர்பாட்டத்தில், மின்சார சட்ட திருத்த மசோதா 2020 ஐ கைவிட வேண்டும். 8 மணி வேலை நேரத்தை உயர்த்த கூடாது, வருங்கால வைப்பு நிதி வட்டியை குறைக்க கூடாது.,சுற்று சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020 ஐ கை விடவேண்டும். மின்சாரம், நிலக்கரி, ரயில்வே, வங்கி, எல்.ஐ.சி.,பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத் துறைகளை விற்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கத்தின் இணை செயலாளர் ராஜேந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினை சார்ந்த ஜான்பிரிட்டோ, தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் ஐக்கிய சங்கத்தினை சார்ந்த ரவிக்குமார், பொறியாளர் கழகத்தினை சார்ந்த ராஜா, மின்வாரிய சங்கத்தினை சார்ந்த ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments