சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கைதான் பதில் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
✍ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஆலங்கோட்டை, மகாதேவ பட்டினம் கிராமங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் ,சத்து மாத்திரைகளை வழங்கினார். மகாதேவ பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 2ஆயிரத்து 431என்ற அளவில் இருப்பதாகவும் எண்ணிக்கை அதிகம் என்றபோதும் கொரொனா வில் இருந்து குணமடை பவர்களின் எண்ணிக்கை 83சதவீதம் என்றும் 1சதவீதம் என்ற அளவில் தான் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டாவது மாவட்டம் உருவாக்குவது குறித்து அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அந்தந்த பகுதிகள் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில் கூறிவருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் தற்போது கூடுதலாக வழங்கப்படும் 5கிலோ அரிசியில் மக்களின் தேவைக்கு ஏற்ப 1கிலோ கோதுமை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்த காமராஜ் தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள உறுதியான அறிக்கையே பதில் என தெரிவித்தார்.
மருத்துவ முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட சுகாதாரத்துறை இனை இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments