தேசிய வேலைவாய்ப்பு அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
✍ | ராஜாமதிராஜ்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காணொளிகாட்சி மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேசிய வேலைவாய்பபு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு பணிகளில் 3 மற்றும் 4 ஆம் பிரிவு பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 4 மாதங்களில் சுமார் 2 கோடி பேர் வேலை இழந்துள்ள தாக பதிவிட்டுள்ளார்.
No comments