Header Ads

ஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை....


 ✍️ | மகிழ்மதி.

சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று உலகின் உயரமான ஒட்டகச்சிவிங்கி என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பட்டத்தை வென்றுள்ளது.

பூமியில் வாழும் உயிரினங்களில் ஓட்டகச்சிவிங்கி தான் மிகவும் உயரமானவை. பாலூட்டி வகையை சேர்ந்த ஒட்டகச்சிவிங்கிகள் பெரும்பாலும் ஆப்பிரிக்க கண்டத்தில் தான் காணப்படுகின்றன. இவற்றின் கழுத்துப்பகுதி மிக நீளமாக இருப்பதால், இவை நேரடியாக மர உச்சியில் இருக்கும் இலைகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும்.

பொதுவாக நம்மூரில் நல்ல உயரமாக இருப்பவர்களை ஒட்டகச்சிவிங்கி என வேடிக்கையாக குறிப்பிடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒட்டகச்சிவிங்கிகளில் அதிக உயரமான ஒட்டகச்சிவிங்கியை பார்த்தால் என்ன சொல்வது?

ஆம் உலகின் அதிக உயரமான ஒட்டகச்சிவிங்கி ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறது. அந்நாட்டின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பீர்வா உயிரியல் பூங்காவில் இருக்கிறது பாரஸ்ட் எனும் ஒட்டகச்சிவிங்கி. இது தான் உலகின் உயரமான ஒட்டகச்சிவிங்கி என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பட்டத்தை வென்றுள்ளது.

13 வயதாகும் பாரஸ்டின் உயரம் 18 அடி 7 அங்குலம். அதவாது 5.7 மீட்டர். உலகின் அனைத்து உயிரியல் பூங்காக்களில் வாழும் ஒட்டகச்சிவிங்கிகளின் உயரத்தை ஆராய்ந்த கின்னஸ் உலக சாதனை புத்தக குழுவினர், பாரஸ்ட் தான் அதிக உயரமான ஒட்டகச்சிவிங்கி என பட்டம் கொடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.