Header Ads

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


 ✍️ | மகிழ்மதி.

நம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. 

டைனிங் டேபிளில் ஹாயாக உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டோ சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் தோன்றலாம். நாம் கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு தரைல உட்காரும் போது, இயல்பாகவே ஓட்டு ஆசன நிலைக்கு வந்து விடுகிறோம். 

இதற்கு "சுகாசன" அல்லது "பாதி பத்மாசன" என்று பெயர். இப்படி உட்காரும் போது நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிற்று தசைகளில் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை சீக்கிரம் செரிக்க வைக்கிறது. மேலும் தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுகளும், இடுப்பெலும்புகளும் வலுவடையும் மற்றும் உடலில் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாக கண்டுபிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.